--- --:--:-- --

6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறப்பு..!

7

ர்நாடகாவில் இன்று முதல் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கர்நாடகத்தில் கொரொனா பரவல் வந்ததையடுத்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதல் கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது.

 

இதற்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து கர்நாடக அரசு இரண்டாம் கட்டமாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்தது.

 

அதன்படி நாடகாவில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறக்கப்படுகின்றன. சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் வகுப்பறையில் 50% மட்டுமே வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் பள்ளிகளில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதல்களை கர்நாடக அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon