கொரோனா பாதித்த நபர் பள்ளி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பள்ளி தற்காலிகமாக மூடல்!
கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நொய்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுதால் அப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருவருக்கும் கொரொனா வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
அவர்களில் ஒருவரான டெல்லியை சேர்ந்த நபர் நொய்டாவில் தனது குழந்தை படிக்கும் தனியார் பள்ளியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தெரியவந்தது. அந்நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் மற்ற குழந்தைகளும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து அப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநில மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதனால் இன்று தொடங்கியிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் பரிசோதனை செய்யவும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





