--- --:--:-- --

OLX மூலம் இந்து சமய அறநிலையத்துறையின் வீட்டை விற்க விளம்பரம்!

2

சென்னையில் ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலமாக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை விற்பதாக விளம்பரம் செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவல்லிக்கேணியில் தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஒரு வீடு சில மாதங்களாக யாரும் வசிக்காமல் காலியாக உள்ளது.

 

இந்த வீடு 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆக இருப்பதாக ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இதை அறிந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

விசாரணையில் கோவிலுக்கு சொந்தமான இந்த வீட்டை விற்பதாக சாதிக்பாட்சா என்பவர் விளம்பரம் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்ய காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon