--- --:--:-- --

“உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை” உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

t
  1. தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

 

தமிழகத்தில் வரும் 27, 30-ந் தேதிகளில், 9 மாவட்டங்கள் தவிர்த்து, எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் ஊரகப் திகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த திங்கட்கிழமை முதல் வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பிலோ, இட ஒதுக்கீடு உள்ளிட்ட எதையும் முறையாக பின்பற்றாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகினர். இட ஒதுக்கீடு விஷயத்தில்,மாநில தேர்தல் ஆணையம் 1991-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தேர்தலை நடத்துவதாக இருவரும் வாதிட்டனர். ஆனால் தமிழக அரசுத் தரப்பிலோ, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

திமுக தரப்பில் பொய் சொல்கிறார்கள் என்றும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டதால் காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து 2011 -ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படிதான் தேர்தல் நடைபெறுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்ப, தேர்தல் ஆணையம் தரப்பில், ஆம் என்றும் அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

மேலும்,தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும்,
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

மேலும்,புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. இதனால் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. எனவே, தேர்தல் நடைபெறுமா? தடை வருமா? என்ற குழப்பத்தில் இருந்த பலருக்கும் சந்தேகம் நீங்கிய நிலையில், கடந்த 3 நாட்களாக மந்தமாக இருந்த வேட்பு மனுத்தாக்கல் நாளை முதல் விறுவிறுப்பாகும் என்றே தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon