பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை வரைபடத்தில் இருந்து நீக்கிய சவுதி அரேபியா..!
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை அந்நாட்டின் வரைபடத்தில் இருந்து சவுதி அரேபியா நீக்கியுள்ளது. இந்த தகவலை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் உரிமைக்காக போராட்டம் நடத்திவரும் அம்சத்அயுக் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய அரசு அண்மையில் வெளியிட்ட 20 மதிப்பு கொண்ட பணத்தாளில் உலக வரை படமும் இடம்பெற்றுள்ளது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள அந்த பகுதி அந்த நாட்டுடையதாக காட்டப்படவில்லை.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அம்ஸத் அயுக் சவுதி அரேபிய அரசின் இந்த செயல் அந்த நாடு இந்தியாவிற்கு அளித்த தீபாவளி பரிசு என குறிப்பிட்டுள்ளார்.







