மது அருந்துதலில் அசாம் மாநில பெண்கள் முதலிடம்..!
நாட்டில் பெண்களில் அதிக மது அருந்துவோர் பட்டியலில் அசாம் மாநில பெண்கள் முதலிடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சர் ஆய்வு தெரிவித்துள்ளது. 2015 -2016 நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அசாம் மாநிலத்தில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 26.3 சதவீத பெண்கள் மது அருந்துகின்றனர்.
பத்தாண்டுகளில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அருணாச்சல பிரதேசம் சட்டீஸ்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.







