--- --:--:-- --

தந்தை, மகனை மிருகத்தனமாக கொன்றவர்களை “சத்தியமா விடவே கூடாது!!” சாத்தான்குளம் சம்பவம் குறித்து ‘வாய்ஸ்’ கொடுத்த ரஜினி!!

dfgs

சாத்தான்குளத்தில் தந்தை, மகனை சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்ற அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். “சத்தியா விடவே கூடாது” என நடிகர் ரஜினி ஆவேசமாக ‘வாய்ஸ்’ கொடுத்துள்ளார்.

 

சாத்தான்குளத்தில் காக்கிச்சட்டை போட்ட சாத்தான்களால் தந்தை, மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோர் ஈவு இரக்கமில்லாமல் மிருகத்தனமாக சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் கல் நெஞ்சம் படைத்தோரையும் கலங்கச் செய்துள்ளது.

இருவரின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அத்துனை துறை பிரபலங்களும் ஒருமித்த குரலில் தங்கள் கண்டனங்களையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். கொலைகார காக்கிச்சட்டைகளை விரைந்து கூண்டில் ஏற்றி தூக்கில் போட வேண்டும் என்ற ஆவேசமும் கொந்தளிப்பும் பல தரப்பிலும் எழுந்து வருகிறது.

 

இந்நிலையில் சாத்தான் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தும், கொலையாளிகளை சத்தியமா விடவே கூடாது என ஆவேசமாக வாய்ஸ் கொடுத்துள்ளார். உயிரிழந்த ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தாரிடம் 2 நாட்களுக்கு முன் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்திருந்த ரஜினி, இன்று தனது டுவிட்டர் பதிவில் பொங்கி எழுந்துள்ளார்.

 

“தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இன வே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும்., விடக் கூடாது.
சத்தியமா _ விடவே_கூடாது.. என ரஜினி ஆவேசமாக பதிவிட்டுள்ளார்”!

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon