சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு : காவல் நிலையத்தில் 18 இடங்களில் ரத்தக்கறை..!
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் அடைக்கப்பட்ட சிறை உட்பட 18 இடங்களில் ரத்த கடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்தக்கறையுடன் கூடிய துணிகள், லத்தியில் ரத்தக்கரை போன்ற பல தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் பல இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்சை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர்கள் அணிந்திருந்த ஆடையை வைத்து ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆய்வாளர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







