--- --:--:-- --

சசிகலா நாளை காலை 10.30 மணி அளவில் விடுதலையாகிறார்..!

7

4 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சசிகலா நாளை காலை 10.30 மணி அளவில் விடுதலையாகிறார். மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவிடம் நாளை காலை ஒன்பது மணி அளவில் காவல் அதிகாரிகள் ஆவணங்களில் கையொப்பம் பெறுவார்கள்.

 

தொடர்ந்து அவர் அங்கிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்ட வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

 

கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய நான்காண்டுகள் சிறைதண்டனை என்பது பிப்ரவரி 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

 

ஆனால் அவர் ஏற்கனவே இந்த வழக்கில் சிறைச்சாலையில் இருந்ததை கணக்கில் கொண்டு அவருக்கு தண்டனை நாட்கள் குறைக்கப்பட்டன. அதையடுத்து நாளைய தினம் அவர் விடுதலையாவதாக சிறைத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon