கொரொனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாததால் சரவணா ஸ்டோர்ஸ் மூடல்..!
சென்னை அம்பத்தூர் அருகே இயங்கி வந்த சரவணா ஸ்டோரில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து வரும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கடை மூடப்பட்டது. பாடியில் உள்ள சரவணா ஸ்டோர் கடை பல்பொருள் அங்காடியாகச் செயல்பட்டு வந்த நிலையில் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் அதிகம் கூடுவதால் புகார் எழுந்தது.
இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் கடையை காலவரையின்றி மூட உத்தரவிட்டனர். மக்கள் அதிக அளவில் கடைகளில் கூடுவதால் நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.







