--- --:--:-- --

நெட் தேர்வில் சமஸ்கிருத கேள்விகள்: பதலளிப்பதில் சிரமம்

5

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக ஆவதற்குத் தேவைப்படும் தேர்வில் சமஸ்கிருதம் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டது.

 

அதற்கு புரிந்து பதிலளிக்க சிரமப்பட்டதாக தேர்வர்கள் தெரிவித்தனர். 2 தாள்களாக நடத்தப்படும் நெட் தேர்வில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி திறனை சோதிக்கும் வகையில் முதல்தாள் அமைக்கப்படும். அதில் டிசம்பர் மாத தேர்வுக்கான மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில் பிரத்தேக்சா, அனுமனோ உள்ளிட்ட சமஸ்கிருத தலைப்புகள் சேர்க்கப்பட்டன.

 

அதை தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு இரு பிரிவுகளாக நடத்தப்படும் நெட் தேர்வில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் சமஸ்கிருதம் சார்ந்து கேட்கப்படுவதாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon