--- --:--:-- --

ஜனவரி முதல் கார்களின் விலை உயர்த்தப்போவதாக மாருதி சுசுகி அறிவிப்பு

6

கார்களின் விலையை வரும் ஜனவரி மாதம் முதல் உயர்த்த இருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. கார் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் விலையை உயர்த்த முடிவு எடுத்திருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் கூறியுள்ளது.

 

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் அறிவிப்பை தொடர்ந்து டொயோட்டோ, மகேந்திரன் மகேந்திரா, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இதேபோன்று விலை உயர்வு அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதேநேரம் ஜனவரி மாதத்தில் வாகனங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வி‌எஸ்6 தரத்தில் சந்தையில் வாகனங்களை அறிமுகப்படுத்தும்போது விலை உயர்வு இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon