மது போதைக்காக சானிடைசர் குடித்தவர் ரத்தக்குழாய் வெடித்து உயிரிழப்பு..!
கும்பகோணத்தில் மது போதைக்காக சானிடைசர் குடித்தவர் ரத்தக்குழாய் வெடித்து உயிரிழந்தார். பெருமாண்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். குடிக்கு அடிமையான நிலையில் கையில் பணம் இல்லாததால் இலவசமாகக் கிடைத்த சானிடைசரை மூன்று மாதங்களாக குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் ரத்தக்குழாய் வெடித்து இன்று உயிரிழந்தார்.




