--- --:--:-- --

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

9

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும் கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon