தங்கள் குழந்தைகளை குப்பை வண்டியில் பள்ளிக்கு அழைத்து செல்லும் தூய்மை பணியாளர்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 200 குடும்பத்தினர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர்.
இவர்களில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆனந்த் நகரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கின்றனர். வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளி உள்ளது.
இவர்கள் தங்களது குழந்தைகளை குப்பைகளை ஏற்றிச்செல்லும் வண்டியில் அழைத்துச் செல்வது வேதனையை தருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.





