--- --:--:-- --

“தலைவர்168” படத்துக்கு சம்பளம் பாதி தான்…! இல்லைனா ‘டிராப்’..! சன் பிக்சர்ஸ் மிரட்டலுக்கு பணிந்த ரஜினி!!

“தலைவர்168” படத்துக்கு சம்பளம் பாதி தான்…! இல்லைனா  ‘டிராப்’..! சன் பிக்சர்ஸ் மிரட்டலுக்கு பணிந்த ரஜினி!!

தர்பார் படம் பெயிலியர் ஆனதால், ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 168 படத்துக்கான சம்பளத்தை பாதியாக குறைக்க ரஜினி சம்மதித்துள்ளாராம். சம்பளத்தை குறைக்கணும்; இல்லைனா படத்தை இத்தோடு டிராப் செய்து விடுவோம் என சன் பிக்சர்ஸ் தரப்பில் நெருக்கடி கொடுக்க, வேறு வழியின்றி ரஜினி பணிந்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

 

ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தர்பார் படம் எதிர்பார்த்த வசூலை அள்ளவில்லை என விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியது தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்டக்கோரி விநியோகஸ்தர்கள் ரஜினியிடமும், படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திடமும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசிடமும் முறையிட்டு வருகின்றனர். ஆனால் விநியோகஸ்தர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த தர்பார் பட சர்ச்சை நீடித்து வருகிறது.

 

இதனால், விநியோகஸ்தர்களால் ரஜினியின் அடுத்தடுத்த படங்களுக்கும் சிக்கல் எழலாம் என்று பேச்சுக்களும் எழுந்து தமிழ் திரையுலகில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரஜினியை வைத்து தலைவர் 168 படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் இதே கலக்கம் வந்துவிட்டது போலும். இந்தப் படத்துக்காக ரஜினிக்கு முதலில் பேசப்பட்ட சம்பளம் ரூ.118 கோடியாம். அதுவும் எல்லாமே வெள்ளையில் தானாம்.

 

தர்பார் விவகாரத்தால் பீதியான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பினர் ரஜினியிடம் முதலில் பேசியபடி 118 கோடி சம்பளத்தை தர முடியாது. பேசியதில் பாதி சம்பளத்துக்கு ஓ.கே.வானால் படத்தை தொடர்வோம். இல்லாவிட்டால் படம் டிராப் தான் என்று ஒரே போடு போட்டார்களாம். இதனால் என்னடா சோதனை? என ரஜினியும் ரொம்ப யோசிக்க ஆரம்பித்து விட்டாராம்.

 

சம்பளத்தில் கறார் காட்டினால் படமே டிராப் ஆனால் என்னாகும்?. ஏற்கனவே சமீப நாட்களில் பல பிரச்னைகளில் நம்ம பேரு ரொம்ப டேமேஜ் ஆகியுள்ள நிலையில், மொத்தமாகவே டமால் ஆகிவிடுமே என்று ரஜினி கலக்கத்துக்கு ஆளாகியுள்ளார்.கடைசியில் 118 கோடிக்கு பதிலாக 58 கோடி ரூபாய் சம்பளத்துக்கு ரஜினி சம்மதித்தே விட்டாராம். இப்போது தமிழ் திரையுலகில் இந்தப் பேச்சு தான் ஹாட் டாபிக். ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் ரூபத்தில் இப்படி ஒரு எதிர்பாராத சோதனை வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தான்.

Leave a Reply

Right Menu Icon