--- --:--:-- --

ஒரு ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் – மக்கள் அமோக வரவேற்பு

3

ஒரு ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் தமிழகத்திலேயே முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் ஏமல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோடை காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

 

இதனை போக்கும் வகையில் தமிழக அரசின் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 580 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏமல் கிராமத்தில் இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஒரு ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே இத்திட்டத்தின் சிறப்பம்சம். ஏமல் கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் சங்கத்தினர் முயற்சியால் இத்திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையுடன் இயங்கும் இந்த நிலையத்தை சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

 

இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெட்டியில் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டால் அடுத்த சில வினாடிகளில் தானாக 20 லிட்டர் குடிநீர் குழாயில் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் திட்டம் அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தங்களின் முயற்சிக்கு அதிகாரிகள் பெரிதும் உதவியாக இருப்பதாகவும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர் .

 

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் பூங்கா அமைக்கப்படும். அதோடு நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon