--- --:--:-- --

சாக்சி மாலிக்கிற்கு விருது கிடைக்காததால் மனமுடைந்து இருப்பதாக வேதனை தெரிவிப்பு..!

2

ர்ஜுனா விருது கிடைக்காததால் மனமுடைந்து போயிருப்பதாக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வேதனை தெரிவித்துள்ளார். விளையாட்டில் சிறப்பிடம் பிடிப்போருக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் அர்ஜூனா விருதுகளை வழங்கி வருகிறது.

 

அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் 27 பேர் இடம் பிடித்துள்ளனர். ஆனால் அர்ஜூனாவை மிகவும் எதிர்பார்த்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இந்த முறையும் பட்டியலில் இடம் பெறாததால் மனமுடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் அர்ஜுனா வீராங்கனை சாக்ஷி மாலிக் என்று அழைக்கப்படுவதை தாம் விரும்புவதாகவும் ஆனால் இம்முறையும் அதற்கு விளையாட்டு அமைச்சகம் பங்கம் விளைவித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அர்ஜுனா விருதை தனது வீட்டில் வைத்து அலங்கரிப்பதே கனவு என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon