--- --:--:-- --

சச்சின் டெண்டுல்கரையும் விட்டுவைக்காத கொரோனா தொற்று!

Sachin 01

கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஒரு காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்தவர். சமீபகாலமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று, அவரையும் விட்டு வைக்கவில்லை.

 

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் பாலிவுட் நடிகர் அமிர்கானுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

 

தற்போது, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு சில நாட்களாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தன. மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என் குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பில்லை.

 

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து என் வீட்டிலேயே நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறேன். அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் எனது நன்றி என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon