ரஷ்ய அதிபர் புதின் நேரடி எச்சரிக்கை..!
உக்ரைன் பிரச்சினையில் தலையிடும் நாடுகளால் தாங்கள் அச்சுறுத்தப்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஜெயின் பீட்டர் நகரில் பேசிய அவர் ரஷ்யாவை அச்சுறுத்தும் எவருக்கும் தங்களுடைய பதிலடி மின்னல் வேகத்தில் இருக்கும் என எச்சரித்தார்.
எந்த ஒரு நாட்டையும் தாக்குவதற்கு தேவையான ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாக குறிப்பிட்டவர் அதனால் தாங்கள் பெருமை கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார். உக்ரைனை நண்பனாக பாவித்து வந்ததாகவும் மேற்கத்திய நாடுகள் அதனை ரஷ்யாவுக்கு எதிரான நாடாக மாற்றி விட்டதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.






