--- --:--:-- --

கொரோனா குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்தி நீக்கப்படும்!

8

கொரொனா குறித்த தவறான தகவல்களுடன் கூடிய பதிவுகளை நீக்குமாறு பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக், டிக் டாக், ஹலோ போன்ற சமூக தளங்களில் பொதுமக்கள் பல தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் சில தகவல்கள் தவறான வழிகாட்டுதலை மக்களுக்கு தரும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

 

இவை மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதுடன் சுய மருத்துவத்தை ஊக்குவித்து உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இவை தவிர கொரொனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தும் வகையில் பல பதிவுகள் வெளியானதாக மத்திய அரசு கருதுகிறது.

 

இதையடுத்து இது போன்ற பதிவுகளை நீக்குமாறு அந்தந்த சமூக ஊடகங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீக்கப்படும் தவறான ஆட்சேபத்திற்குரிய பதிவுகளை அதையிட்டவரை பற்றிய தகவல்களை அளிக்குமாறு சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது தெரிகிறது.

 

கொரொனா தொடர்பாக மத்திய அரசு தரும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டாம் என ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு தவறான வழிகாட்டும் பதிவுகள் அதிகளவில் இடப்பட்டு வருவதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon