டிக் டாக்கில் வலம் வரும் ரவுடி பேபி சூர்யா தனிமப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்கொலை முயற்சி!
திருப்பூரில் டிக் டாக் பிரபலமான ரவுடி பேபி சூர்யா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த சுபலட்சுமி என்ற இவர் டிக் டாக் சமூக வலைத்தளத்தில் சூர்யா என்ற பெயரில் பிரபலமானவர். அத்துமீறலான வீடியோக்களால் ரவுடி பேபி சூர்யா என்று அழைக்கப்பட்டதால் அதனையே தனது பெயராக மாற்றிக்கொண்டார்.
கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சூர்யா கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கே அவருக்கு கொரொனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பூருக்கு 16ஆம் தேதி வந்தார். சிங்கப்பூரில் இறங்கி வந்ததால் பீதி அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கும், சுகாதார துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சூர்யாவை அதிகாரிகள் அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டனர். இவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் என்று நோட்டீஸ் செய்யும் ஓட்டிச் சென்றனர். இந்நிலையில் சூர்யா இன்று அதிகாலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிகிறது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரை கொரொனா சிறப்பு தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.






