--- --:--:-- --

திருவாடானையில் சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்!

2.1

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலையில் வானிேந்தல் கிராமத்தின் அருகே சாலையின் ஓரத்தில் ஏராளமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. மருத்துவ கழிவுகளுடன் காலி மதுபாட்டில்களும் கிடக்கின்றது. இந்த மருத்துவ கழிவுகள் எங்கிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்டது என்ற விவரம் அறிய முடியவில்லை.

இருந்தும் சாலையோரம் இப்படி பாதுகாப்பற்ற முறையில் மருத்துவ கழிவுகள் கொட்டி கிடப்பது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விவசாய காலங்களில் விவசாயிகள், ஆடு மாடு மேய்போர் ஒரு வித அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழி தோண்டி புதைக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon