தென் ஆப்பிரிக்காவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ரத்து..!
கொரொனா வைரஸ் தொற்று உச்சம் தொட்ட நிலையில் தென்னாப்பிரிக்காவில் இரண்டு ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த ஊரடங்கு திடீரென நீக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது.
கொரொனாவின் பிடியில் சிக்கிய நாடுகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரொனாவான ஓமிக்ரான் கடந்த நவம்பர் 24ஆம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது.
இன்றைக்கு உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலும் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உச்சம் தொட்டது. கடந்த 16ஆம் தேதி ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உச்சமாக உள்ளது. இந்நிலையில் அந்த நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.






