--- --:--:-- --

அழகு நிலையத்தில் வேலை பார்த்த பெண்ணிடம் அத்துமீறல்..!

10

பெண்களிடம் அடுத்தடுத்து அத்து மீறியதாக வந்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த அழகு நிலைய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் சாலிகிராமத்தில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

 

அழகு நிலையத்தில் வேலை பார்த்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் குமாரை தேடி வந்தனர். அதேநேரம் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் இரண்டு கோடி ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியதாக இளம்பெண் ஒருவரும் போலீசில் புகார் அளித்திருந்தார்.

 

அதேபோல் அடுத்தடுத்த பெண்கள் புகார் அளிக்க வந்த நிலையில் ஆனந்தராஜன் மனைவியும் புகார் அளித்தார். இந்த சூழலில் தலைமறைவாக இருந்த ஆனந்தராஜை போலீசார் தேடிவந்தனர். ஆனந்தராஜை கைது செய்த தனிப்படை போலீசார் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon