--- --:--:-- --

மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்திற்கான பொறுப்புகள்..! சோனியா காந்தி வெளியிட்ட பட்டியல்..!

11

ழைக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான பொறுப்புகள் யார் யாருக்கு என்ற புதிய பட்டியலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர் என்ற கேள்வியோடு 23 மூத்த தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதி சலசலப்பை ஏற்படுத்தின.

 

அதனால் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியது. அதில் ராகுல் காந்தி மீது மூத்த தலைவர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்நிலையில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் சோனியாகாந்தி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

 

செப்டெம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் பலருக்கு பொறுப்புகளை வழங்கியுள்ளார். அதன்படி குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, அகமது பட்டேல், கேசி வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷை உள்ளடக்கிய மாநிலங்களவை காங்கிரஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சௌரி துணைத் தலைவராககௌரவ் கோகாய் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் சுரேஷ், சிங் பிட்டூர், மாணிக்கம் தாகூர் அடங்கிய மக்களவை காங்கிரஸ் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon