--- --:--:-- --

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க கூட்டத்தில் நீண்டகால கோரிக்கையான காலமுறை ஊதியத்தில் அரசு உடனே அளித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி தீர்மானம்

437874a3-6fff-48dc-93a0-cda24027d37c

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க கூட்டத்தில் கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட வட்டத்தை சேர்ந்த கிராம ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் கோவை தெற்கு வடக்கு கோட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தாமஸ் அரங்கில் நடைபெற்றது .

வட்ட தலைவர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இதில் கோட்ட பொருளாளர் ஆறுமுகம் வரவேற்றார். இதில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட மாநாடு கூட்டத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் திரளாக பங்கு பெறுவது மற்றும் நமது நீண்டகால கோரிக்கையான காலமுறை ஊதியத்தில் அரசு உடனே அளித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

கூட்டத்தில் கோவை வடக்கு,தெற்கு,சூலூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட தாலுகா மாவட்டத்தைச் சேர்ந்த கிராம ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon