--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

2

ன்று (ஆகஸ்ட் 5) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்குப் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

குறிப்பாக, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது.

 

புதுச்சேரியில் அதிகபட்சமாக 11 சென்டிமீட்டர் மழை பதிவானது. அதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் முகையூரில் 10 செ.மீ மழையும், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பேட்டையில் 9 செ.மீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Right Menu Icon