போதையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த நபர் மீட்பு..!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் போதையின் உச்சத்தில் கழிவுநீர் கால்வாயில் இருந்து விழுந்து வெளியேற முடியாமல் தவித்த குடிமகனை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். நாகர்கோவில் பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான கூடத்தில் மூக்கு முட்ட குடித்த குடிமகன் ஒருவர் அந்த வழியாக சென்றபோது விழுந்துள்ளார்.
கழிவுநீர் கால்வாய்க்குள் சென்று சிக்கிக்கொண்ட அவர் குப்புறப் படுத்துக் கொண்டதால் குடிமகனின் கால்கள் மட்டுமே வெளியே தெரிந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி அவரை மீட்டனர்.






