--- --:--:-- --

தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!

13

மிழகத்தில் கொரொனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10-ஆம் தேதி வரை வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

 

அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்த ஒத்தி வைக்கப்படுகிறது. முக்கியமாக ஆறாம் தேதி புத்தக கண்காட்சி சென்னையில் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுத்தப்படும்.

 

வழிபாட்டுத் தலங்களை பொருத்தவரை தற்போது நடைமுறையில் உள்ள வழிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும். உணவகங்கள், தங்கும் விடுதிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுவார்கள். பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்களில் 50% நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

 

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்ச்சியில் 50 பேருக்கு மிகாமல் அனுமதிக்கப்படும். துணிக்கடைகள் மற்றும் நகை கடைகள் ஒரே நேரத்தில் 50 வாடிக்கையாளர்களுடன் செயல்படுத்தப்படும். உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத நபர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவர்.

Right Menu Icon