--- --:--:-- --

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி!

4

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் எலி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரபிரதேச மாநிலம் மெர்சாபூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக சப்பாத்திக்கு தொட்டுக்க உப்பு வழங்கப்பட்ட சம்பவத்தில் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோன்று ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு விநியோகம் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த விவகாரத்தில் சூடு அடங்குவதற்குள் தற்போது மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவில் எலி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கபூர் கிராமம்.

 

இந்த கிராமத்தை சேர்ந்த அரசு சாரா அமைப்பு சார்பில் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டது. மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட நிலையில் உணவில் இறந்த எலி இருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதனை அறியாமல் உணவு சாப்பிட்ட ஆசிரியர் மற்றும் 9 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து முசாஃபர்நகர் மாவட்ட ஆட்சியர் உணவு வினியோகித்த அமைப்பின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

 

உத்திர பிரதேச அரசின் டிசம்பர் 2018 ஆம் ஆண்டின் படி மாநிலம் முழுவதும் உள்ள ஒன்றரை லட்சம் தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon