--- --:--:-- --

தீட்சிதருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்

6

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதர் தர்சனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படக் கூடும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் முன்ஜாமீன் கோரியிருந்தார்.

 

மனுவை நீதிபதி சேஷசாயி விசாரித்தபோது புகார் அளித்த பெண்மணி தரப்பில் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து தீட்சிதர் 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கியிருக்கவும், ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் ஆகியோர் வந்து கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி ஆணையிட்டார்.

Leave a Reply

Right Menu Icon