--- --:--:-- --

இந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்..!

4.2

பிரான்ஸிடமிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்க விமானப்படை ஏற்பாடு செய்து வைக்கப்பட்டது.

 

36 போர் விமானங்களில் இதுவரை 10 விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது பிரான்ஸ் நிறுவனம். ரஃபேல் விமானம் 9 டன் எடைகொண்ட குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும்திறன் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

 

இரட்டை எஞ்சின் கொண்ட ரபேல் விமானங்களை போர்க் கப்பல்களில் எளிதாக தரையிறக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. அம்பாலா பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அந்த பகுதி முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது.

 

அந்தப் பகுதியில் யாரும் வீட்டின் மாடிக்கு வர வேண்டாம், புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என அனைத்தும் தடுக்கப்பட்ட
விஷயம் எனவே இதனை செய்யாதீர்கள் என்று தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon