சொத்துக்காக மகளும், பேரனும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தாய் புகார்..!
சொத்து பத்திரங்களை பறித்துக்கொண்டு தனியார் மனநல மருத்துவமனை ஓராண்டுக்கு மேலாக அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியதாக பெற்ற மகள் மீது தாய் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த 72 வயதான சாந்தகுமாரி கணவர் இன்றி தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி தனது மகளும், பேரனும் சேர்ந்து தனது வீட்டுக்கு வந்து சொத்து பத்திரங்கள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தன்னை மனநல மருத்துவமனையில் சேர்த்ததாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
தனது சகோதரிக்கு தகவல் அளித்ததன் பேரில் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை செலுத்தி தன்னை காப்பகத்திலிருந்து மீட்டதாக அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
தனது மகளின் கொடுமையால் அவர் பெயரில் எழுதி தந்த வீட்டையும், தன் பெயரில் உள்ள சொத்துகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தாய் என்றும் பார்க்காமல் தன்னை சித்திரவதை செய்த மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாந்தகுமாரி தெரிவித்துள்ளார்.






