--- --:--:-- --

அரசு பேருந்துக்குள் ஒழுகிய மழைநீர்..! நனைந்தபடி மக்கள் பயணம்..!

6

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அரசு பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால் பொதுமக்கள் நனைந்தபடியே பயணம் செய்தனர். புளியங்குடி பகுதியில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்றில் நிகழ்ந்த இந்த அவலத்தை அதில் பயணம் செய்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

 

போக்குவரத்து துறையினர் இது போன்று பேருந்துகளை கண்காணித்து அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon