--- --:--:-- --

வாஷிங் மெஷினிலிருந்து 5 அடி நீளமுள்ள பாம்பு..!

5

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே வாஷிங் மெஷினிலிருந்து 5 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்தனர். சின்னாளபட்டி அடுத்த கலைமகள் காலனி பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று இருப்பதாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

 

தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் வாஷிங் மெஷினுக்குள் கொம்பேறி மூக்கன் பாம்பு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அந்த பாம்பை லாவகமாக பிடித்து தீயணைப்புத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon