எய்ட்ஸ் இருப்பது தெரிந்தே மகளை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை..!
மதுரை மாவட்டத்தில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஹெச்ஐவி எய்ட்ஸ் தொற்று ஏற்பட்ட துயரம் நேர்ந்துள்ளது.
பள்ளிப்பட்டு அருகே வசிக்கும் ராமமூர்த்தி என்ற நபர் கேரளாவில் வேலை பார்த்தபோது கணவரை இழந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் மற்றும் அவரது பிள்ளைகளுடன் சேர்ந்து டீ கல்லுப்பட்டி அருகே வசித்து வந்துள்ளார் ராமமூர்த்தி.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணின் 13 வயது இளைய மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பரிசோதனையில் சிறுமி நான்கு மாதம் கருவுற்றிருப்பது பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
சிறுமியின் தாய் தந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராமமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமமூர்த்தி தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிந்தே வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை அந்த பகுதி மக்களை பதற வைத்துள்ளது.






