--- --:--:-- --

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்..!

3

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு பதிலாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டின் ராணுவம் எச்சரித்துள்ளது.

 

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

 

அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி ஆங்சாங் சுகி தலைமையிலான கட்சியின் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக நாட்டில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டின் ராணுவம் எச்சரித்துள்ளது. பொது மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் உண்டாக்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக ராணுவ கவச வாகனங்களில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon