பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்த பேராசிரியர் உயிரிழப்பு.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!
சென்னை படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூரிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எல்எல்பி மாணவர்களுக்கு பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கல்லூரியின் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஸ்டான்லி வரதராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பேராசிரியர் உயிரிழப்பிற்கு கல்லூரியில் போதிய அடிப்படை மருத்துவ வசதி இல்லாததை காரணம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.





