--- --:--:-- --

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்..!

2

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு கடந்த 28ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏராளமானோர் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டனர்.

 

இத்திட்டத்திற்காக பல்வேறு மாநில அரசுகள் தடுப்பூசிக்கு ஆர்டர் செய்திருந்தனர். ஆனால் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து இன்னும் தடுப்பூசிகள் வழங்கப்படாமல் இருப்பதால் தற்போது பல்வேறு மாநிலங்கள் இன்று கொரொனா 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படாது என அடுத்தடுத்து அறிவித்து வருகின்றனர்.

 

மத்திய பிரதேசத்தில் 18 வயது முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு மே ஒன்றாம் தேதி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்க முடியாது என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். தற்போது கையிருப்பில் குறைவான அளவில் தடுப்பூசி இருப்பதால் அது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேவைப்படுவதாக கூறினார்.

 

இதேபோன்று டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா, அருணாச்சல் பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தள்ளி வைக்க முடிவு செய்திருக்கின்றனர். இதனால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் பல்வேறு மாநிலங்களில் இன்று தொடங்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon