சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது..!
திண்டுக்கல் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்து அருகே உள்ள ஆறு பட்டியை சேர்ந்த 37 வயது தங்கவேல் தொடர்ந்து தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை தெரிந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த 65 வயது பெருமாள், 70 வயது குருநாதன் ஆகியோரும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.
பலமுறை பாலியல் கொடுமைக்கு உள்ளான நிலையில் மாணவியை தனியாக அழைத்துச் செல்வது மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எஸ்பி பரிந்துரையின் பேரில் அவர்கள் மூவரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.






