--- --:--:-- --

கொரானாவால் பாதிக்கப்பட்டோருக்கு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு ஏற்பாடு..! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!!

15

கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

தமிழக சட்டப்பேரவையில் கொரானா வைரஸ் தொற்று தொடர்பான கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதிலளிக்கையில், டெல்லியில் இருந்து வந்த நபருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 10 பேரை கண்காணித்து வருகிறோம். கொரானா பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சைக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்தவும் வழிவகை செய்ய வாய்ப்புள்ளது.

 

தமிழகம் முழுவதும் 32 பேர் மட்டுமே கொரானா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரானா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் மட்டும் ஏற்படுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் கொரானாவுக்கு சிகிச்சை அளிக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தரமான ஆய்வுகங்கள் ஏற்படுத்த தனியார் மருத்துவமனைகள் முன்வந்தால் மத்திய அரசின் அனுமதிக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon