--- --:--:-- --

பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ சென்றடைந்தார்..!

3

ப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ சென்றடைந்தார். கடந்த ஜூலை 8ஆம் தேதி தேர்தல் பரப்புரையில் இடம்பெற்று வந்த பொழுது சின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். ஜப்பானின் ஆயிரம் ஆண்டு ஜப்பானின் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

 

பிரம்மாண்டமான முறையில் இறுதி சடங்குகள் நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இறுதி சடங்கில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட 50 நாட்டு தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளார்.

 

தனிப்பட்ட முறையிலும் தனது நெருங்கிய நண்பர் என்பதால் மிகுந்த பணிச்சுமைக்கு இடையிலும் அபேவின் இறுதி சடங்கில் பிரதமர் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார்.

 

Right Menu Icon