அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை..!
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஓட்டேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்றிரவு 11 மணியளவில் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அவர் கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





