--- --:--:-- --

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன்..!

4

சென்னை கொளத்தூர் சன்னதி தெருவில் வசித்து வருபவர் சிவராமு. இவருக்கு வயது நாற்பத்தி ஐந்து. இவர் தனது மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் அக்கம் பக்கத்தினரிடம் பேசுவதற்கு கூட முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்த லட்சுமி வழக்கம்போல் சந்தேக புத்தி கொண்ட சிவராமன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சிவராமன் தனது மனைவி ஜெயலட்சுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

 

இதனால் அலறி துடித்த லட்சுமி சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ஆபத்தான நிலையில் இருந்தவரை அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

தற்போது அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

Right Menu Icon