கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு..!
கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கேதார்நாத்திற்கு பிரதமர் ஆண்டு தோறும் செல்வது வழக்கம்.தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தின்போது, நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி பார்வையிட்டு, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
கேதார்நாத் கோவிலில் பூஜை செய்த பிறகு, பிரதமர் மோடி 9.7 கிமீ கௌரிகுண்ட்- கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். கேதார்நாத்தில் தனது இரண்டரை மணி நேர நிகழ்ச்சியின்போது, ஆதி குரு சங்கராச்சாரியாரின் சமாதி ஸ்தலத்தையும் மோடி பார்வையிட உள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி இரண்டு புகழ்பெற்ற மலைக்கோயில்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





