உணவகத்தில் இருந்து வாங்கி சென்ற குருமாவில் பல்லி..!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் உள்ள உணவகத்தில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் வாங்கி சென்ற குருமாவில் பல்லி இருந்ததால் வட்டாட்சியர் உள்ளிட்ட குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டு தற்காலிகமாக உணவகத்தை மூட உத்தரவிட்டனர்.
அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் பார்சல் வாங்கி சென்ற பரோட்டா மட்டன் குருமாவை சாப்பிட்டு தனது தந்தை சிறிது நேரத்தில் மயங்கி அதன்பின் வாந்தி எடுத்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சாப்பிட்ட உணவில் பல்லி இருந்தது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





