--- --:--:-- --

பிரதமர் மோடி மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு..!

8.1

ந்திராவுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்புதல் குறித்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

 

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த சந்திப்பில் கடப்பா எஃகு ஆலை திட்டம், நீர்ப் பாசனத் திட்டத்தில் நிலுவையில் உள்ள தொகையை விடுவிப்பது ஆகியவை தொடர்பாக பிரதமருடன் ஜெகன்மோகன் விவாதித்தார்.

 

நிலுவையில் உள்ள வருவாய் மானியத் தொகையான 10 ஆயிரம் கோடி ரூபாயை உடனே விடுவிக்குமாறு மோடியிடம் ஜெகன்மோகன் கேட்டுக்கொண்டார்.

 

ஜெகன்மோகனின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய போவதாக கடந்த 8 மாதமாக செய்திகள் உலா வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் அரசியல் குறித்து பேசப்பட்டதா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

Right Menu Icon