--- --:--:-- --
1

மிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.தமிழ்நாட்டில் வரும் செவ்வாய்க்கிழமையுடன் பரப்புரை நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, கடந்த 15-ஆம் தேதி, நாகர்கோவில் வந்த பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ சென்றார்.

 

இதன் நீட்சியாக, இன்று கோவை வரும் பிரதமர் மோடி, மாலை 6 மணிக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பொதுக்கூட்டத்தின் வாயிலாக வாக்கு சேகரிக்க உள்ளார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

மேலும், கோவை விமான நிலையத்தில் இருந்து கொடிசியா மைதானம் வரை பிரதமர் மோடி ரோட் ஷோ செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, நாளை தமிழ்நாடு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

Leave a Reply

Right Menu Icon