--- --:--:-- --

மனைவி மற்றும் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த நபர்..!

6

திருச்சியில் மனைவி மற்றும் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறி நீதிமன்றத்தில் சரண் அடைந்த நபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி நான்கு நாட்கள் அனுமதி அளித்துள்ளார்.

 

பெரிய மிளகுப்பாறையில் குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி பெற்று வந்த உலகநாதனின் மனைவி பவித்ரா, மாமியார் கலைச்செல்வி இருவரும் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இரண்டரை வயது மகள் கனிஷ்காவுடன் தலைமறைவான உலகநாதன் குழந்தையை பெரம்பலூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் விட்டுவிட்டு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

பின்னர் போலீசார் உலகநாதனை திருச்சிராப்பள்ளி கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகம் முன்பு ஆஜர் படுத்தினார். நான்கு நாட்கள் விசாரணைக்கு பின்னரே இரட்டை கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என திருச்சி போலீசார் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon